SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் வீதிக்கடவை சமிக்ஞை விளக்குகளில் பெண் உருவம் சேர்க்கப்பட்டுள்ளது!

ABC
Source: ABC Australia

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

மெல்பேர்ன் நகரில் Pedestrian traffic lights-பாதசாரிகளுக்கான வீதிக்கடவை சமிக்ஞை விளக்குகளில் இதுவரை காலமும் ஆண் உருவம் மட்டும் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது பெண் உருவமும் சேர்க்கப்பட்டுள்ளது.

பாதசாரிகளுக்கான வீதிக்கடவை சமிக்ஞை விளக்குகளில் ஆண்களின் உருவங்கள் மட்டுமே இடம்பெறுவதானது பாரபட்சமான ஒன்று என்பதால்,  ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பெண்களின் உருவங்களும் இடம்பெறவேண்டுமென வலியுறுத்தி The Committee for Melbourne என்ற அமைப்பு மேற்கொண்ட பிரச்சாரத்தினையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக மெல்பேர்ன் நகரின் Swanston மற்றும் Flinders street இலுள்ள வீதிக்கடவை சமிக்ஞை விளக்குகளில் பெண் உருவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதேவேளை சகல வீதிக்கடவை சமிக்ஞை விளக்குகளிலும் ஆண் மற்றும் பெண் உருவங்கள் இடம்பெறவேண்டுமென்பதே தமது கோரிக்கை என The Committee for Melbourne அமைப்பின் தலைவர் Martine Letts தெரிவித்துள்ளார்.

6 சமிக்ஞை விளக்குகளில் மாற்றம் செய்வதற்கு சுமார் 8,400 டொலர்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now