Watch FIFA World Cup 2026™ LIVE, FREE and EXCLUSIVE

மெல்பேர்ன் நகரில் பொதுமக்கள் மீது காரால் மோதி தாக்குதல்- மூவர் பலி- 20 பேர் காயம்

(Twitter/@kayvee_imp)

Source: (Twitter/@kayvee_imp)

மெல்பேர்ன் நகரின் மையப் பகுதி என்று சொல்லக்கூடியBourke Streetற்கு அருகில்  கடுஞ்சிவப்பு நிற வாகனம் ஒன்று, பாதசாரிகள் மேல் வேண்டுமென்றே  மோதியதில் மூவர் மரணமடைந்துள்ள அதேநேரம் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

Members of the public watch as police and emergency services attend to an injured person after a car hit pedestrians in central Melbourne, Australia
Members of the public watch as police and emergency services attend to an injured person after a car hit pedestrians in central Melbourne, Australia Source: X80002

Bourke Street ல் நின்று கொண்டிருந்த Rebecca Russo என்பவர் ஊடகத்திற்கு வழங்கிய செய்தியில், தான் Bourke Street Mall ற்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது, ஒரு கடுஞ்சிவப்பு நிற (maroon) வாகனம் Flinders Street பகுதியிலிருந்து வேகமாக வந்ததாகவும், அதைக் கண்ட பலரும் சிதறி ஓடியதாகவும், ஒரு சிலரின் மீது அந்த வாகனம் மோதியதாகவும், அதனால் ஒருவர் மேலே பறந்ததைத் தான் கண்டதாகவும் கூறியுள்ளார்.

Twitter
Source: Twitter

குறித்த காரை வேகமாக ஓட்டிச் சென்று பொதுமக்கள் மீது மோதியவரைத் தாம் கைது செய்துள்ளதாகவும் இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் எனத் தாம் நம்பவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் தமது பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இன்று மெல்பேர்ன் நகரின் முக்கிய பல வீதிகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நகருக்குள் வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

Henrietta Cook
Source: Henrietta Cook
Police fire shots and seize driver in Bourke St, Melbourne #news #melbourne pic.twitter.com/47RiyJvW0Q — bwadamson (@BWAdamson) 20 January 2017


1 min read

Published

Updated



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now