SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் விமான நிலையம் செல்வதற்கான Tullamarine Freeway பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு!

Melbourne's CityLink and part of the Tullamarine freeway will be upgraded under an $850m plan.
Source: AAP

1 min read

Published

Presented by Renuka.T



Skip to article content

மெல்பேர்னில்  இன்று சனிக்கிழமையும்(25.02.2017) ஞாயிற்றுக்கிழமையும்(26.02.2017) முக்கிய வீதித்திருத்த வேலைகள் நடைபெறவுள்ளன.

குறிப்பாக  மெல்பேர்ன் விமான நிலையம் சென்று திரும்புவதற்கான Tullamarine Freeway- யின் M80 Ring Road-க்கும் Calder Freeway-க்கும் இடைப்பட்ட பகுதி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

அதேநேரம் CityLink-இன் West Gate Freeway-க்கும் Flemington Road-க்கும் இடைப்பட்ட பகுதி(outbound) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணி முதல் அடுத்த நாள் காலை 4.30 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

இந்த நேரங்களில்  மேற்குறிப்பிட்ட இரு வீதிகளிலும் பயணம் செய்பவர்கள் சுமார் 10-20 நிமிடங்கள் வரை தாமதத்தை எதிர்நோக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மெல்பேர்னில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய வீதித் திருத்த வேலைகள் குறித்த  மேலதிக விபரங்களுக்கு citylinktullawidening.vic.gov.au என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now