SKIP TO MAIN CONTENT

மனுஸ் தீவில் இரு புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது தாக்குதல்

Refugee Action Coalition
Source: Refugee Action Coalition

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

பப்புவா நியூகினியின் மனுஸ் தீவிலுள்ள இரு ஈரான் புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது அந்நாட்டு காவல்துறை மற்றும் குடிவரவு அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாக Refugee Action Coalition தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு Lorengau township-இல் வைத்து Mehdi மற்றும் Mohammad ஆகிய இருவர் மீது மதுபோதையிலிருந்த இரு குடிவரவு அதிகாரிகள், இந்தநேரத்தில் நீங்கள் தடுப்பு முகாமிற்கு வெளியில் இருக்க முடியாது எனக்கூறி தாக்குதல் நடத்தியதாகவும், பின்னர் காவல்துறையினரும் இணைந்து கொண்டு மூர்க்கத்தனமாக தாக்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு 36 மணிநேரங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்க காவல்துறையினர் மறுத்திருந்ததாகவும் Refugee Action Coalition தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டுமென Refugee Action Coalition-இன் Ian Rintoul வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை அங்கு என்ன நடந்தது என்ற முழுமையான தகவல்கள் தமக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்றும், இது பப்புவா நியூகினி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட விடயம் எனவும் குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்தார்.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now