ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த புகலிடக்கோரிக்கையாளர் தடுப்பு முகாமான மனுஸ் தீவு தடுப்பு முகாம் மூடப்படுவதாக குடிவரவு அமைச்சர் Peter Dutton அறிவித்துள்ளார்.
குடிவரவு அமைச்சர் Peter Dutton மற்றும் பப்புவா நியூகினி பிரதமர் Peter O'Neill இடையிலான இன்றைய சந்திப்பின் பின்னர் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஆனால் இம்முகாமிலுள்ள எவரும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டார்கள் என குடிவரவு அமைச்சர் அறிவித்துள்ளார்.
குறித்த முகாமிலுள்ள 854 பேரையும் அங்கிருந்து இடம் மாற்றுவதற்குத் தேவையான உதவிகளை ஆஸ்திரேலியா பப்புவா நியூகினி அரசுக்கு வழங்குவதாகவும் அமைச்சர் Peter Dutton தெரிவித்தார்.
அதேநேரம் மனுஸ் தடுப்பு முகாமை மூடுவது என்ற தமது முடிவுக்கு தற்போது ஆஸ்திரேலியா இணங்கியிருப்பதாகவும் இதையடுத்து தனது பங்கினை பப்புவா நியூகினி அரசு செய்யும் எனவும் அந்நாட்டு பிரதமர் Peter O'Neill கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த 854 பேரும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட வேண்டுமென கிரீன்ஸ் கட்சி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
