வீடுகளில் உள்ள நீச்சல் தடாகங்களின் பாதுகாப்பு ஆஸ்திரேலிய சட்டங்களுக்கு அமைவாக இருக்கிறதா என்பதை அனைவரும் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்பதை இரட்டைக் குழந்தைகளில் ஒன்றின் மரணம் நினைவுபடுத்துவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் மேற்கு சிட்னியின் Kellyville Ridge இலுள்ள வீட்டின் பின்புறம் அமைந்திருந்த நீச்சல் தடாகத்தினுள்ளிருந்து மீட்கப்பட்ட 2 வயது ஆண் மற்றும் பெண் இரட்டையர்கள், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் பெண் குழந்தை நேற்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் ஆண்குழந்தைக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்படுகின்றது.
இந்தப்பின்னணியில் வீட்டிலுள்ள நீச்சல் தடாகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேநேரம் குழந்தைகள் அப்பகுதிக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டுமென காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
Share
