SKIP TO MAIN CONTENT

நுளம்புகள்(கொசுக்கள்) ஜாக்கிரதை! Ross River வைரஸ் நோய் பரவுகிறது!

Ross River virus
Source: AAP-Dave Hunt

1 min read

Published

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

விக்டோரியா மாநிலத்தில் Ross River virus எனப்படும் வைரஸ் நோய் பரவி வருவதால் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Ross River வைரஸ், கொசு/நுளம்புகளால் கடத்தப்படுவதால் கோடை காலத்தில் நுளம்புக்கடியிலிருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

விக்டோரியாவின் Mildura மற்றும் Moira Shire ஆகிய பகுதிகளில் இவ்வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் மட்டும் இவ்வைரஸால் பாதிக்கப்பட்ட 314 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

  • கை கால் மூடிய மெல்லிய உடைகளை அணிதல்
  • Mosquito sprays, vaporising devices, fly screens போன்றவற்றைப் பயன்படுத்தி வீட்டினுள்ளிருக்கும் நுளம்புகளை ஒழித்தல்
  • உடலில் mosquito repellents பூசிக் கொள்ளுதல்
  • வீட்டில் நுளம்பு பெருகுவதற்கான வழிகளை இல்லாதொழித்தல்
  • அதிக நேரம் வெளியில் இருப்பதைத் தவிர்த்தல்

போன்றவற்றின் மூலம் நுளம்புக்கடியிலிருந்தும் வைரஸ் தாக்கத்திலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என விக்டோரியா தலைமை சுகாதார அதிகாரி பேராசிரியர் Charles Guest அறிவுறுத்தியுள்ளார்.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now