- 1. இங்குவிற்பனைசெய்யப்படும்மருந்துகள்தரமானவைதான்என்றுநாம்நம்பலாமா?
பொதுவாக இங்கு அரசு அனுமதிபெற்று விற்கப்படும் மருந்துகள் அனைத்தும் தரமானவை என்று நம்பலாம்.
- 2. இங்குவிற்கப்படுகின்றமருந்துகளுக்குஅரசுஅனுமதிஎவ்வாறுவழங்கப்படுகிறது? மருந்துகளின்தரம்எப்படிகண்காணிக்கப்படுகிறது?
இங்கு Therapeutic Goods Act 1989 என்ற முக்கியமான சட்டத்தின் அடிப்படையில் மருந்துகளின் தரமும் பயனும் கண்காணிக்கப்பட்டு அனுமதி வழங்கப் படுகிறது. மருந்துகளைம், பாண்டேஜ்கள், இரத்த அழுத்தும் பார்க்கும் கருவிகள் போன்ற மருத்துவத்திற்குத் தேவையான மற்ற சாதனங்களையும் Therapeutic Goods என்று கூறுவார்கள். இவற்றில் மருத்துவ சாதனங்கள் Medical Devices என்ற வகையைச் சேர்ந்தவை. அவற்றின் தரமும் கண்காணிக்கப்படுகிறது.
- 3. Therapeutic Goods Act-ஐ யார், எப்படி அமல் படுத்துகிறார்கள்?
நடுவனரசின் உடல்நலத் துறையின் கீழ் இயங்கும் Therapeutic Goods Administration – சுருக்கமாக TGA என்று கூறுவார்கள், அந்த நிறுவனம் அமல் படுத்துகிறது. ஆஸ்திரேலியாவில் ஒரு மருந்தை விற்பனை செய்வதற்கு முன் அந்த மருந்து பற்றிய முழு விவரங்களையும், தேவையான மற்ற ஆவணங்களையும் (documents) TGA-வுக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் அந்த ஆவணங்களை ஆய்வு செய்து தரமான மருந்து என்பதை உறுதி செய்தபின், அந்த மருந்தைப் பதிவு செய்து அதற்கான பதிவு எண் ஒன்றையும் கொடுத்து விற்பனைக்கு அனுமதி வழங்குகிறார்கள்.
அதற்கு முன்பாகவே அந்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை TGA-வின் ஆய்வாளர்கள் தணிக்கை (audit) செய்து அனுமதி வழங்குவார்கள்.
- 4. பலவிதமானமருந்துகளைநாம்பயன்படுத்துகிறோம். அவைஅனைத்தையும்ஒரேமாதிரிபரிசீலனைசெய்கிறார்களா?
இல்லை. குறிப்பிட்ட மருந்துகளின் பயன், அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள், அபாயங்கள் இவற்றிற்கு ஏற்ப Prescription Medicine, Over-The-Counter medicine, Complementary Medicine என்று மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்கிறார்கள். இவற்றைப் பரிசீலனை செய்வதற்கு தனித்தனிப் பிரிவுகளும் TGA-வில் இருக்கின்றன.
- 5. Over-The-Counter அப்படிஎன்றால்என்ன?
Over-The-Counter, அதை OTC-என்று சுருக்கமாகச் சொல்லலாம். OTC Medicine என்றால் மருத்துவருடைய சீட்டு இல்லாமல் நாம் வாங்கக் கூடிய மருந்துகள்.
- 6. OTC Medicine-களில்ஏதாவதுஉள்பிரிவுகள்உள்ளனவா?
ஆம். மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன. Pharmacist Only Medicine, Pharmacy Medicine, General Sale Medicine என்று மூன்று வகைகள் உள்ளன. முதலாவது, Pharmacist Only Medicine என்பவை Pharmacy-யில் Pharmacist-ன் மேற்பார்வையில் இருக்கும். அவருடைய ஆலோசனைக்குப் பிறகுதான் இவற்றை நாம் வாங்க முடியும். இரண்டாவது, Pharmacy Medicine என்பவை. இவை Pharmacy-யில் மட்டும் விற்பனை செய்யக்கூடிய மருந்துகள். இவற்றை Pharmacist-ன் ஆலோசனை பெறாமலேயே வாங்கமுடியும். மூன்றாவது, General Sale Medicine, இவை பொதுவான விற்பனைக்குரிய மருந்துகள். இவை சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட விற்பனை செய்யக் கூடிய மருந்துகள். இவற்றில் Pharmacist Only Medicine, Pharmacy Medicine என்பவற்றை Scheduled Medicine என்று கூறுவர்கள். General Sale Medicine என்பவற்றை Unscheduled Medicine என்று கூறுவார்கள்.
(கட்டுரையாளர்: அன்பு ஜெயா, Pharmaceutical Chemist )
இக்கட்டுரையில் தரப்பட்டிருக்கும் தகவல்கள் பொதுவான தகவல் மட்டுமே. அதிக தகவலுக்கும், குறிப்பிட மருந்துபொருட்கள் குறித்த தகவலுக்கும் நீங்கள் Therapeutic Goods Administration ஐ தொட்ரபுகொள்ளுங்கள். TGA-வின் இணைய தளம் www.tga.gov.au TGA தகவல் அறியும் தொலைபேசி இலக்கம்: 1800 020 653 அல்லது 02 6232 8644. மின்னஞ்சல் முகவரி info@tga.gov.au
