நாட்டில் unemployment benefits-வேலை இல்லாதவர்களுக்கான Centrelink கொடுப்பனவு பெறுபவர்களில் சுமார் 36, 000 பேர் இந்தக் கொடுப்பனவைப் பெறுவதற்காக அவர்களது வேலையை விட்டுவிட்டதாக அல்லது அவர்களுக்கு வரும் வேலை வாய்ப்புக்களை நிராகரித்திருப்பதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாண்டு அக்டோபர் வரையான காலப்பகுதிக்குள் வேலை செய்வதற்கான தகுதியுடைய 35,576 பேர் அவர்களுக்கு வந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் பலர் வேலை வாய்ப்பு வரும் போது உடனடியாகவே அதை மறுத்துவிடுவதாகவும், இன்னும் சிலர் வேலைக்குச் செல்வது போல பாவனை செய்துகொண்டு, அங்கு வேண்டுமென்றே தவறிழைத்து பணிநீக்கம் பெறுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் இனியும் அனுமதிக்கப்பட மாட்டாதென்றும், வேலை செய்வதற்கு விரும்பாமல் அல்லது தமக்கு வரும் வேலை வாய்ப்புக்களை மறுப்பவர்களின் கொடுப்பனவு நிறுத்தப்படுமெனவும் கருவூலக் காப்பாளர்-Treasurer Scott Morrison தெரிவித்துள்ளார்.
அரசு ஆண்டொன்றுக்கு 160 பில்லியன் டொலர்களை Centrelink கொடுப்பனவுகளுக்கு மாத்திரம் செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share
