SKIP TO MAIN CONTENT

நீங்கள் Gumtree பயன்படுத்துபவரா?

gumtree
gumtree Source: gumtree

1 min read

Published

Presented by Renuka.T



Skip to article content

நாட்டிலுள்ள பலர் பொருட்களை விற்கவும் வாங்கவும் Gumtree எனப்படும் இணையத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

Gumtree-யின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இதைப் பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டுவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக கைத்தொலைபேசியை விற்கப்போவதாக யாரேனும் Gumtree-யில் விளம்பரம் கொடுத்தால் அவர்களைத் தொடர்பு கொண்டு, நேரடியாகச் சந்தித்து அதை வாங்க விரும்புவதாகத் தெரிவிக்கும் திருடர்கள், குறித்த நபர் நேரில் வந்ததும் அவரைத் தாக்கிவிட்டு கைத்தொலைபேசியைக் களவாடிச் செல்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்ற ஏழுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் சிட்னியின் Lidcombe, Strathfield, Regents Park, Merrylands, Brookvale, Marsfield , Canley Heights ஆகிய பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இணைய விற்பனை தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now