Antibacterial- கிருமி கொல்லி சோப்பு/சவர்க்காரம் உலகெங்கும் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், இந்தவகை சோப்புகளில் பல இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என அமெரிக்கா தடைவிதித்துள்ளது.
சாதாரண சோப்பைவிட ஆன்டி பாக்டீரியல் சோப்புகளில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், கிருமிகளை கொன்று உடல்நலத்திற்கு நன்மை பயக்கின்றன என்பதை அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நிரூபிக்கத் தவறிவிட்டதாக The US Food and Drug Administration தெரிவித்துள்ளது.
இதனால் அமெரிக்காவின் சோப்பு உற்பத்தி நிறுவனங்கள் 19 வகையான Antibacterial இரசாயனப் பொருட்களை உபயோகப்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக The US Food and Drug Administration அறிவித்துள்ளது.
இவ்வாறு தடைசெய்யப்பட்ட இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ள பல சோப்புகள் ஆஸ்திரேலியச் சந்தையிலும் விற்பனையாவதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆராய்ச்சியாளர்கள் , இதேபோன்ற தடை ஆஸ்திரேலியாவிலும் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Australia should follow the United States and ban some antibacterial chemicals from everyday soaps because they don't work and could be causing serious health problems, scientists say.
The US Food and Drug Administration last week ruled that 19 ingredients could no longer be used in domestic antibacterial soaps and washes because manufacturers had failed to show they were safe for long-term use or any better at stopping illness and the spread of infections than regular soap and water.
The banned chemicals are in about 40 per cent of soaps and liquid washes sold in US and are in some domestic products sold in Australian supermarkets and chemists.
Palmolive Antibacterial Liquid Handwash and Dettol bar soap, for example, contain triclocarban, one of the most commonly used antibacterials.
Nicholas Coleman, senior lecturer in microbiology at the University of Sydney, said there was compelling evidence that bacteria grew resistant to the chemicals used in domestic antibacterial products, and called for a similar ban in Australia.
"The scary thing is that they also become resistant to a whole range of other products, including serious antibiotics that are used in hospitals," Dr Coleman said.
