SKIP TO MAIN CONTENT

ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களுக்கான penalty rates கொடுப்பனவு குறைக்கப்படுகிறது!

Australian dollars in Sydney, Friday, Jan. 15, 2016. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING
Source: AAP

1 min read

Published

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேலை செய்யும் hospitality, retail, pharmacy மற்றும் fast-food  துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் penalty  rates-உடனான அதிக கொடுப்பனவு குறைக்கப்படவுள்ளதாக Fair Work Commission தெரிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டிலுள்ள அரை மில்லியன் பேர் தமது வருடாந்த வருமானத்தில் சுமார் 6,000 டொலர்களை இழப்பர் என குறிப்பிடப்படுகின்றது.

Hospitality, retail, pharmacy  மற்றும் fast-food துறைகளில் பணிபுரியும் முழுநேர மற்றும் பகுதிநேர பணியாளர்கள் அனைவரும் இம்மாற்றத்தின் மூலம் பாதிக்கப்படவுள்ளனர்.

இதன்படி Hospitality துறை பணியாளர்களுக்கான ஞாயிறு கொடுப்பனவு 175 வீதத்திலிருந்து 150 ஆகவும், Retail  பணியாளர்களின் கொடுப்பனவு 200 வீதத்திலிருந்து 150 வீதமாகவும்,  Fast-food துறை level 1 பணியாளர்களின் கொடுப்பனவு 150 வீதத்திலிருந்து 125 வீதமாகவும் குறைக்கப்படவுள்ளது.

AAP
Source: AAP

இதேவேளை பொதுவிடுமுறை நாளுக்கான கொடுப்பனவில் கொண்டுவரப்படும் மாற்றம் எதிர்வரும் ஜுலை 1ம் திகதி அமுலுக்கு வரும் அதேநேரம் ஞாயிறு கொடுப்பனவில் கொண்டுவரப்படும் மாற்றம் எப்போது அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஒரு வருடத்திற்குள் குறித்த மாற்றம் அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now