நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Gunning பகுதியிலுள்ள water tank- நீர்த்தாங்கியினுள்ளிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முதலில் 69 வயதான Andrew என்ற நபர் குறித்த நீர்த்தாங்கியைச் சுத்தப்படுத்துவதற்கு உயர் அழுத்த water pump-ஐப் பயன்படுத்திக் கொண்டிருந்த போது அவர் மரணமடைந்துவிட்டதாகவும், பின்னர் அவரைத் தேடி சகோதரர் Richard-உம், அவர்கள் இருவரையும் தேடி திருமதி Andrew-வும் உள்ளே சென்ற நிலையில், அவர்களும் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீர்த்தாங்கிக்குள் செல்வதற்கு முதல் திருமதி Andrew அயலவர்களை உதவி கோரிய நிலையில், அவர்கள் அவசர சேவைப்பிரிவினரை அழைத்திருந்த போதிலும் குறித்த மூவரையும் காப்பாற்ற முடியவில்லை.
நீர்த்தாங்கியினுள் உருவாகியிருந்த Carbon monoxide நச்சு வாயுவைச் சுவாசித்ததாலேயே இவர்கள் மூவரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
