SKIP TO MAIN CONTENT

ஒலிம்பிக் 2016 ஆரம்ப விழாவில் பல ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்!

AAP
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 31ஆவது ஒலிம்பிக் போட்டி, சிட்னி நேரப்படி, இன்று, சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகின்ற நிலையில் தொடக்க விழாவில் 103 ஆஸ்திரேலிய அணியினர் மட்டுமே கலந்து கொள்ளப் போகிறார்கள்.

Rio2016
Source: Getty Images

தொடக்க விழாவில், ஒன்றரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரம் வரை இவர்கள் நிற்க வேண்டியிருக்கும் என்பதாலும், முதல் நாளே 158 போட்டியாளர்கள் போட்டியிட இருப்பதாலும், இவர்கள் தொடக்கவிழாவில் கலந்து மாட்டார்கள் என்று ஆஸ்திரேலிய ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.  மேலும் தமது இந்த முடிவு சரியானதுதான் என ஆஸ்திரேலிய ஒலிம்பிக் அணியின் தலைவர் Kitty Chiller நியாயப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியினர் அணிவகுக்கும்போது Australian track cyclist, Anna Maree Meares ஆஸ்திரேலிய தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார்.

Olympics
Source: Getty Images

2012 லண்டன் ஒலிம்பிக்கில் தொடக்க விழாவுக்காக மட்டுமே பல மில்லியன் டொலர் செலவிடப்பட்டது. ஆனால் ரியோ ஒலிம்பிக்கில் லண்டன் போட்டிக்கு செலவிடப்பட்ட தொகையில் 10 சதவீதம் மட்டுமே தொடக்க விழாவுக்கு செலவழிக்கப்பட உள்ளது.

தென் அமெரிக்க மண்ணில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவது இதுதான் முதன்முறை. மேலும் போர்த்துக்சீய மொழி பேசும் நாட்டில் ஒலிம்பிக் திருவிழா நடத்தப் படுவதும் இதுதான் முதன்முறை.

Rio2016
Source: AFP

இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய நீச்சல் அணி அதிக பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  Cameron McEvoy என்ற போட்டியாளர் ஆண்களுக்கான 50, 100, மற்றும் 200 மீட்டர் நீச்சல் போட்டிகளில் அபார வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்வு கூறியுள்ளார்கள்.  

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now