SKIP TO MAIN CONTENT

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை!

AAP
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: SBS



Skip to article content

மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாம்களிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாதபடி தடை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது.

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலுள்ளவர்கள் உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டாலும் அவர்கள் எக்காரணம் கொண்டும் தமது வாழ்நாள் முழுவதும் ஆஸ்திரேலியாவுக்குள் எந்தவொரு விசாவிலும் வர முடியாதபடி செய்வதற்கான சட்டமுன்வடிவு அடுத்த வாரம் நாடாளுமன்றில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் Malcolm Turnbull தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியநிலையில் ஜுலை 2013 முதல் நவுறு மற்றும் மனுஸ் தடுப்பு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இத்தடை பொருந்தும் என குறிப்பிடப்படுகின்றது.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now