SKIP TO MAIN CONTENT

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு புதிய உதவி!

AAP
Source: AAP

2 min read

Published

Presented by Renuka.T



Skip to article content

படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து புகலிடம் கோரியவர்களுக்கான புதிய உதவி ஒன்று வழங்கப்படுகின்றது.

விக்டோரியா மாநிலத்தில் அகதி அந்தஸ்து கோரும் நிலையில் வாழ்ந்து வருபவர்களுக்கு குறிப்பாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு அவர்களின் அகதி விண்ணப்பம் குறித்த சட்ட உதவிகளை வழங்க விக்டோரிய மாநில அரசு முன்வந்துள்ளது.

தற்போது அவர்களுக்கு சட்ட உதவி இல்லாத நிலையில் விக்டோரிய அரசின் Legal Aid நிறுவனம் இதற்கு நிதியுதவி வழங்குவதுடன் Refugee Legal and Justice Connect எனும் இரு நிலையங்களுடன் இணைந்து புகலிடம் கோருவோருக்கு சட்ட உதவிகளை வழங்கவுள்ளது.

ஆஸ்திரேலிய அரசின் புதிய Fast Track எனும் நடவடிக்கையில் புகலிடம் கோருவோருக்கு அதிக சட்ட உதவி இல்லையென்பதால் விக்டோரிய மாநில அரசு இரு ஆண்டுகளுக்கு சட்ட உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

2012ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2014ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா வந்து தற்போது அகதி அந்தஸ்து கோருவோர் இந்த சட்ட ஆலோசனை பெற தகுதி பெறுவர்.

More than 10,000 asylum seekers living in Victoria will be able to access legal assistance under a new two-year initiative announced by the State Government.

The initiative is funded by Victoria Legal Aid and will enable two community legal centres — Refugee Legal and Justice Connect— help asylum seekers prepare visa applications and express their claims in writing.

Under the Federal Government's "fast-track" system, asylum seekers living in the community while awaiting processing have no right to a review if their claim for protection is rejected.


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now