SKIP TO MAIN CONTENT

புகலிடக்கோரிக்கையாளர்களை குடியமர்த்தும் திட்டமொன்றுக்கு ஆஸ்திரேலியா இணக்கம்!

Asylum seekers
Source: AAP

1 min read

Published

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

நவுறு தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை நியூசிலாந்தில் குடியமர்த்துவதா இல்லையா என்பது அந்த இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விடயம் என குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.

ஆனால் படகுமூலம் வந்த எவரும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்பதை தாம் மீண்டும் வலியுறுத்துவதாக, Al Jazeera தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் Peter Dutton தெரிவித்தார்.

அமைச்சரின் இக்கூற்று நவுறு புகலிடக்கோரிக்கையாளர்களை நியூசிலாந்தில் குடியமர்த்தும் திட்டத்திற்கு ஆஸ்திரேலியா இணங்கியுள்ளமையையே காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக ஆண்டுக்கு 150 பேர் என்ற அடிப்படையில், புகலிடக்கோரிக்கையாளர்களை தமது நாட்டில் குடியமர்த்துவதற்கு தயாராக உள்ளதாக நியூசிலாந்து அறிவித்திருந்த போதிலும்,  இதுவரை ஆஸ்திரேலியா தனது சம்மதத்தை தெரிவித்திருக்கவில்லை.

இதேவேளை கடந்த ஜுலை 31ம் திகதி எடுக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, நவுறு தடுப்பு முகாமில் 49 சிறுவர்கள் உட்பட 411 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now