SKIP TO MAIN CONTENT

புகலிடக்கோரிக்கையாளர்களை குடியமர்த்த தயார்-மேற்கு ஆஸ்திரேலியா அறிவிப்பு

Asylum seekers staring at media from behind a fence at the Manus Island detention centre
Asylum seekers staring at media from behind a fence at the Manus Island detention centre Source: AAP

1 min read

Published

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

நவுறு புகலிடக்கோரிக்கையாளர் தடுப்பு முகாமிலுள்ள குடும்பங்களை உள்வாங்க மேற்கு ஆஸ்திரேலியா தயாராக உள்ளதாக அம்மாநில முதல்வர் Colin Barnett தெரிவித்துள்ளார்.

கடல்கடந்த தடுப்பு முகாமிலுள்ள எவரும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ள பின்னணியில் ஆஸ்திரேலிய அரசு தனது முடிவினை மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பங்களை மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் குடியமர்த்த தாம் தயாராக உள்ளதாக முதல்வர் Colin Barnett தெரிவித்தார்.

சிறுவர்கள் தடுப்பு முகாமில் வாழ்வது கவலைக்குரிய விடயம் எனக் குறிப்பிட்ட அவர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத குடும்பங்களை குடிமர்த்துவதில் எவ்வித சிக்கலும் இருக்காது எனக் கூறியுள்ளார்.

 

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now