Watch FIFA World Cup 2026™ LIVE, FREE and EXCLUSIVE

புகலிடக்கோரிக்கையாளர்கள் மீதான வாழ்நாள் தடைக்கு லேபர்கட்சி எதிர்ப்பு!

Refugees detained at Manus Asylum Seeker Processing Centre, PNG.

Source: AAP

மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாம்களிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாதபடி தடை செய்யும் அரசின் திட்டத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என எதிர்க்கட்சியான லேபர் கட்சி தெரிவித்துள்ளது.

எனவே இது தொடர்பில்  நாடாளுமன்றில் அரசு இன்று அறிமுகப்படுத்தியுள்ள சட்டமுன்வடிவுக்கெதிராக வாக்களிக்கப்போவதாக லேபர் கட்சி தெரிவித்துள்ளது.இன்று கூடிய லேபர்கட்சியின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிரீன்ஸ் கட்சியும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் செனட் அவையில்  இச்சட்டமுன்வடிவு வெற்றிபெறுவதற்கு சுயாதீன மற்றும் சிறுகட்சி செனட்டர்களின் ஏகோபித்த ஆதரவு அரசுக்கு தேவைப்படுகின்றது.

குறித்த சட்டமுன்வடிவுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைக்கும்பட்சத்தில் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலுள்ளவர்கள் உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டாலோ, அல்லது மூன்றாவது நாடொன்றில் குடியேறினாலோ, அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் ஆஸ்திரேலியாவுக்குள் எந்தவொரு விசாவிலும் வர முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

The Federal Opposition will vote against the Government's proposed lifetime visa ban for refugees who try to reach Australia by boat, with several Labor MPs saying the party will now be quicker to challenge the Government's asylum seeker policies.

The Coalition today introduced a bill that would prevent people who tried to arrive after mid-2013 from ever coming to Australia for any reason.

But Labor MPs and senators this morning unanimously voted to oppose the legislation in Parliament.

The Greens also oppose the proposal, meaning the Coalition now needs a majority of balance-of-power Senate crossbenchers to make it law.


2 min read

Published

Updated

Presented by Renuka.T




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now