SKIP TO MAIN CONTENT

புகலிடக்கோரிக்கையாளர்களைத் தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு!

AAP
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: Reuters



Skip to article content

பப்புவா நியூகினியின் மனுஸ் தீவில் ஆப்கான் புகலிடக்கோரிக்கையாளர்களைத் தாக்கிய இரு உள்ளூர்வாசிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

குறித்த இருவரையும் சிகரெட் மற்றும் காசு கேட்டு மிரட்டி இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக புகலிடக்கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான இரு ஆப்கான் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மனுஸ் தீவில் புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் இவ்வாறான தாக்குதல்கள், அரசின் கடல் கடந்த தடுப்பு முகாம் திட்டம் சரிவர இயங்கவில்லை என்பதையே காட்டுவதாக மனித உரிமைகள் சட்ட மன்றத்தின் பேச்சாளர் Daniel Webb தெரிவித்தார்.


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now