SKIP TO MAIN CONTENT

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்த கிருதின் நித்தியானந்தம்!

Krtin
Source: Krtin

1 min read

Published

Presented by Renuka.T

Source: The Telegraph, UK



Skip to article content

பிரிட்டனில் வசிக்கும் இந்தியப் பின்னணி கொண்ட 16 வயது மாணவன் கிருதின் நித்தியானந்தம், மார்பக புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

Triple negative மார்பக புற்றுநோய் என்பது மிகவும் தீவிரமான, தற்போது இருக்கின்ற மருந்துகளுக்கு கட்டுப்படாத புற்று நோயாக காணப்படுகின்றது. அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு மற்றும் chemotherapy ஆகியவற்றால் மட்டுமே இதற்கு சிகிச்சை வழங்க முடியும்.

இந்தநிலையில் Triple negative மார்பக புற்றுநோய் தாக்கிய நோயாளிகளில் உள்ள ID4 எனும் புரதத்தை அழிப்பதற்கான வழிமுறையைக் கண்டறிந்துள்ளதன் மூலம் மருந்துகளால் சிகிச்சையளிக்கக்கூடிய நிலைக்கு நோயாளியை மாற்ற முடியும் என கிருதின் தெரிவித்துள்ளார்.

இதற்காக, பிரிட்டனின் இளம் விஞ்ஞானிகளுக்கான The Big Bang Fair விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் கிருதினின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை ஒருவருக்கு Alzheimer எனப்படும் நினைவிழப்பு நோய்  ஏற்படுவதற்கான முதலாவது அறிகுறி தென்படுவதற்கு 10 வருடங்களுக்கு முன்பாகவே அதைக் கண்டறியும் சோதனை முறையைக் கண்டு பிடித்ததற்காக, கடந்த ஆண்டு Google Science Fair விருது கிருதினுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now