ஆஸ்திரேலியாவிற்கு பெற்றோரை வரவழைக்கும் போது அவர்களது வாழ்க்கைச் செலவை பிள்ளைகளே பொறுப்பேற்க வேண்டுமென்ற புதிய கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட வேண்டுமென அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விசா கட்டணங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த வருடம் அரசினால் அமைக்கப்பட்ட Productivity Commission என்ற விசாரணைக்குழு இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளது.
வயதான பெற்றோர் ஆஸ்திரேலியாவில் குடியேறும் போது அவர்களின் மருத்துவ மற்றும் நலன்புரி சேவைகளுக்கென பல மில்லியன் டொலர்கள் செலவாகுவதாக Productivity Commission சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே தற்காலிக விசா ஒன்றுடன் ஆஸ்திரேலியா வரும் பெற்றோரின் மருத்துவ மற்றும் வாழ்க்கைச் செலவுகளை அவர்களது பிள்ளைகளே பார்த்துக் கொள்ளும் பட்சத்தில், அவர்கள் இங்கே நீண்ட காலம் தங்க முடியும் என்ற கட்டுப்பாட்டை அமுல்படுத்தலாம் என இவ்விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதேவேளை Productivity Commission இன் பரிந்துரை நியாயமானது என்பதுடன், அவசியமான பரிந்துரை என Migration Council Australia வரவேற்றுள்ளது.
எனினும் ஆஸ்திரேலியாவிற்கு பெற்றோரை வரவழைக்கும் விடயத்தில் அரசு ஏற்கனவே பல கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால், இனிமேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடாது என Ethnic Communities Councils of Australia உள்ளிட்ட பல அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
Share
