SKIP TO MAIN CONTENT

பிரிஸ்பேனில் பேருந்து ஒட்டுனர் உயிருடன் எரித்துக் கொலை!

பிரிஸ்பேனில் கொடூரம்: பேருந்து ஒட்டுனர் உயிருடன் எரித்துக் கொலை!

Bus
Source: SBS

1 min read

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS



Skip to article content

பிரிஸ்பேன் பெருநகரின் Moorooka எனுமிடத்தில் Beaudesert சாலையின் அருகே பேருந்து நின்றபோது அதில் ஏறிய மூன்று பயணிகளில் ஒருவர் திடீரென்று பேருந்து ஓட்டுனர் மீது பெட்ரோல் போன்ற தீப்பற்றும் திரவத்தை ஊற்றி தீயிட்டு கொளுத்தினார். கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பற்றிக்கொள்ள, பேருந்து ஓட்டுனர் உயிரிழந்தார். பேருந்து ஓட்டுனரின் வயது 29 என்றும் அவரை எரித்துக்கொன்றதாக நம்பப்படும்  கொலையாளியின் வயது 48 என்றும் போலீசார் கூறுகின்றனர்.  

கொலையாளி என்று நம்பப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனாலும் இந்த கொலையைச் செய்ய என்ன காரணம், இது பயங்கரவாதத் தாக்குதலா அல்லது முன் விரோதம் காரணமா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.    

பேருந்து ஓட்டுனர் எரித்துக் கொல்லப்பட்ட வேளையில் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளை பேருந்து அருகே டாக்ஸி ஓட்டிவந்த Aguek Nyok என்பவர் சமயோசிதமாக பேருந்தின் பின்பக்கத்தைத் திறந்து பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளார். கொலை நடந்த கோரத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்று கூறும் போலீசார், Aguek Nyok யின் வீர தீர செயலை பாராட்டியுள்ளனர்.   


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now