SKIP TO MAIN CONTENT

பிரித்தானியாவில் 5 தமிழர்கள் கடலில் மூழ்கி பலி!

beach

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: The Telegraph, UK



Skip to article content

இலங்கைப் பின்னணி கொண்ட 5 தமிழர்கள் இங்கிலாந்தின் Sussex  பிராந்தியத்தின் Camber Sands கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக The Telegraph செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கு நிலவும் உயர் வெப்பநிலை காரணமாக பலர் கம்பர் சான்ட் கடற்கரைக்கு செல்வதோடு, கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலில் குளிக்கும் போது காணாமல் போன மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டு சுமார் மூன்று மணிநேரத்தின் பின்னர், மேலுமிரு சடலங்கள் கரையொதுங்கியதாக அச்செய்தி கூறுகின்றது.

இலங்கை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களான சத்தியநாதன் கோபிகாந்த், சத்தியநாதன் கேனுஜன் மற்றும் ஸ்ரீஸ்காந்தராசா இந்துசன், ஆகிய 3 பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிதர்சன் மற்றும் குரு ஆகிய ஐந்து பேருமே பலியானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்தோடு, மேலுமொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஹெலிக்கொப்டரின் உதவியுடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் Poole கடற்கரைக்குச்  சென்ற தமிழ் இளைஞர் ஒருவரும் கடலில் மூழ்கி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now