மெக்ஸிக்கோவின் Aeromexico விமானத்தினுள் பயணிகளோடு சேர்த்து பாம்பு ஒன்றும் பயணம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை Torreon இலிருந்து Mexico City சென்றுகொண்டிருந்த விமானத்தினுள் overhead luggage compartment பகுதியில் சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள பச்சை நிற பாம்பை பயணி ஒருவர் அவதானித்ததையடுத்து அங்கிருந்தவர்கள் அச்சத்தால் உறைந்து போயினர்.
அடுத்த 10 நிமிடங்களில் முன்னுரிமை தரையிறக்கம் மூலம் Mexico Cityயில் விமானம் தரையிறக்கப்பட்டு விலங்கு கட்டுப்பாட்டுப் பணியாளர்களால் பாம்பு விமானத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
பிரபல ஹொலிவூட் திரைப்படமான Snakes on a Plane தற்போது நிஜத்திலேயே உணரப்பட்டதாக ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
இதேவேளை குறித்த விமானத்தில் பயணம் செய்த Indalecio Medina என்ற பயணி தனது கைபேசியில் பாம்பை வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
La vibora voladora...ja ja ja. Una experiencia única en el Vuelo Torreón-México, vuelo 231 de Aeroméxico. Eso si...Prioridad en aterrizaje. pic.twitter.com/qwDk6Wtszw — Indalecio Medina (@Inda_medina) November 6, 2016
Share
