SKIP TO MAIN CONTENT

Scholarships for budding interpreters

TAFE-NSW
Source: Public Domain

1 min read

Published

Presented by Renuka



Skip to article content

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு interpreter-மொழிபெயர்த்துரைப்பாளருக்கான இலவச புலமைப்பரிசில் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுமார் 1 லட்சம் டொலர்கள் செலவில் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்படவுள்ள இப்புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் 45 மாணவர்களுக்கு மொழிபெயர்த்துரைப்பாளர்களாக வருவதற்கான இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தமிழ்மொழி உட்பட மேலும் 21 மொழிப்பின்னணி கொண்டவர்களுக்கு சுமார் ஒரு வருடகாலத்திற்கு TAFE NSW ஊடாக இப்பயிற்சி நெறி வழங்கப்படவுள்ளது.

பயிற்சிநெறியை வெற்றிகரமாக பூர்த்திசெய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளராக பணிபுரிய முடியும்.

குறித்த பயிற்சிநெறிக்கு விண்ணப்பிப்பவர்கள் இதற்கான ஆங்கிலத் தேர்வுப்பரீட்சையில் தமது புலமையை நிரூபிக்க வேண்டும்.

ஆஸ்திரேலிய குடியுரிமை, நிரந்தர வதிவிட உரிமை கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். அதேநேரம் புகலிடக்கோரிக்கையாளர்கள் எவரேனும் இத்திட்டத்தில் இணையவிரும்பினால் அது குறித்தும் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சிநெறியில் இணைய விரும்புவர்கள் பெப்ரவரி 8ம் திகதி பிற்பகல் 5 மணிக்கு முன்னதாக விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்புலமைப்பரிசில் திட்டம் 2019 நடுப்பகுதியில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் regional பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்த மேலதிக விபரங்களுக்கும் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கும் www.multicultural.nsw.gov.au என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now