SKIP TO MAIN CONTENT

self-service checkout ஊடாக காணாமல் போகும் பொருட்கள்- நேரடியாக களமிறங்குகிறது காவல்துறை!

Coles Self Checkout
Coles Self Checkout Source: Getty Images

1 min read

Published

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள Coles வர்த்தக நிலையங்களிலுள்ள self-service checkout-களை காவல்துறையினர் கண்காணிக்கவுள்ளனர்.

குறித்த self-service checkout-களினூடாக களவு போகும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக Coles நிறுவனத்திடமிருந்து முறைப்பாடு கிடைத்தததையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதன்படி self-service checkouts அமைந்திருக்கும் பகுதிகளில் சிவில் உடை தரித்த காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ள அதேநேரம் பிரத்தியேக கமராக்களும் பொருத்தப்படவுள்ளன.

2 டொலர் பெறுமதியான பொருளாக இருந்தாலும் அதற்கு பணம் செலுத்தாமல் எடுத்துச் சென்றால் அதுவும் திருட்டே எனக் குறிப்பிட்டுள்ள காவல்துறையினர், இப்படியாக சின்னத் திருட்டில் ஈடுபடுபவர்களும் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் எனக் கூறியுள்ளனர்.

இதேவேளை கடந்த வருடம் மட்டும் நாடு முழுவதும் 11,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் self-service checkout-களினூடாக பொருட்களைத் திருடிச் சென்றபோது தம்மிடம் சிக்கியதாக Coles நிறுவனம் தெரிவித்துள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now