Settlement Guide - Time for the flu vaccination

PA WIRE

Source: Press Association

இலையுதிர் காலம் ஆரம்பித்து குளிர் காலத்தை வரவேற்கத் தயாராகும் அதேநேரம் இக்காலப்பகுதியில் நம்மைத் தாக்கும் Flu வையும் மறந்துவிடக்கூடாது.
AAP
Source: AAP
2016ம் ஆண்டுக்கான தேசிய தடுப்பூசி வழங்கும்  திட்டம் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகின்ற நிலையில் 6 மாத குழந்தையிலிருந்து அனைவரையும் Flu தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு ஆஸ்திரேலிய தொற்றுநோய்த்தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் Flu காரணமாக 13,500 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். 3000 பேருக்கும் மேல் மரணமடைகின்றனர். இதில் 5-9 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் 85 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களுமே அதிகளவில் காணப்படுகின்றனர்.
AAP
Source: AAP
இதேவேளை முன்னரைவிட Flu குறித்த பரிசோதனைகளைச் செய்வதற்கான வசதிகள் அதிகம் காணப்படுவதால் அதிகளவானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்றமையை கண்டுபிடிக்கக்கூடியதாக இருப்பதாக NCIRS - தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

வைரஸானது புதுப்பித்துக்கொள்ளும் சக்தி வாய்ந்தது என்பதால் ஏனைய தடுப்பூசிகளைப் போலல்லாமல் Flu தடுப்பூசி ஒவ்வொரு வருடமும் போடப்பட வேண்டும். மேலும் இரண்டு வகையான Flu தடுப்பூசிகள் இருக்கின்றன. ஒன்று 3 வகையான வைரஸ்களிலிருந்து பாதுகாப்பது. மற்றையது 4 வகையான வைரஸ்களிலிருந்து பாதுகாப்பது.
AAP
Source: AAP
இதேவேளை Flu அதிகளவில் தாக்குவது ஆகஸ்ட் மாத காலப்பகுதியில் என்பதால் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மார்ச், ஏப்ரல் என இலையுதிர் காலத்தின் நடுப்பகுதியிலேயே ஆரம்பித்துவிடும்.

Flu க்கான தடுப்பூசியை உங்கள் குடும்ப வைத்தியரிடம் சென்றோ அல்லது மருத்துவ மையங்களுக்குச் சென்றோ போட்டுக்கொள்ளலாம்.
இந்த தடுப்பூசியைப் போட்டவுடன் சிலருக்கு Flu ஏற்படுவது போன்ற அறிகுறி ஏற்பட்டலாம். ஆனால் அது அந்த தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவேயாகும்.

Flu தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பூர்வ குடிகளின் குறிப்பிட்ட வயதினர் மற்றும் Flu ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளவர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படும்.
AAP
Source: AAP
அத்துடன் கர்ப்பிணிப்பெண்கள் தமது கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் இந்த தடுப்பூசியைப் போடுவது பாதுகாப்பானதாகும்.

நான் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் என்ன பயன் என்று நினைக்காமல் நாம் ஒவ்வொருவரும் தடுப்பூசியை போடுவதன் மூலம் சமூகத்தில் Flu பரவுவதற்கான சந்தர்ப்பங்களைக் குறைக்க முயற்சிக்கலாம் என ஆஸ்திரேலிய தொற்றுநோய்த்தடுப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
AAP
Source: AAP
TheImmunise Australia Programwebsite contains more information on the flu vaccination rollout.





Share
2 min read

Published

Updated

Presented by Renuka.T

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand