ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration விசாவின் முக்கிய அம்சம் points test system ஆகும்.
ஒருவர் Skilled Migration விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் புள்ளிகள் points test system ஊடாக கணக்கிடப்படுவது வழக்கம். இந்த நிலையில் points test system-ல் முக்கிய மாற்றம் அமுல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி ஆஸ்திரேலியாவிலுள்ள கல்வி நிறுவனங்களில் Science, Technology, Engineering Mathematics மற்றும் Information & communication technology ஆகிய துறைகளில் Doctorate மற்றும் Masters படித்தவர்களுக்கு மேலதிகமாக 5 புள்ளிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே biological sciences, earth sciences, chemical sciences, mathematics, physics and astronomy, computer science, information technology, aerospace engineering and technology, civil engineering, geomatic engineering, electrical engineering and technology, manufacturing engineering, maritime engineering and process and resources engineering ஆகிய துறைகளில் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றவர்கள் இப்புதிய மாற்றத்தின் மூலம் நன்மையடையவுள்ளனர்.