Superannuation/ஓய்வுறு பருவ நிதி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்!

AAP

Source: AAP

நீங்கள் ஆஸ்திரேலியாவில் வேலை செய்பவர் என்றால் உங்களது சம்பளத்தின் ஒரு சிறு பகுதி Superannuation/ஓய்வுறு பருவநிதி சேமிப்பாக கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும்.

இது வேறு வகையான ஒரு வரி என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அப்படியென்றால் Superannuation என்பது என்ன? அதனால் என்ன நன்மை என்று பார்ப்போம்.
Businessman standing in hoops in desert back view full length
Businessman standing in hoops in desert back view full length Source: AAP
தொழிலாளர்கள் ஓய்வுபெறும் காலத்தில் அவர்களுக்குரிய வருமானத்தை வழங்கும் ஒரு கட்டாய நீண்டகால சேமிப்புத் திட்டமென Superannuation-ஐக் குறிப்பிடலாம்.

இளைஞர்களாக இருக்கும் போது நாம் ஓய்வுபெறும் காலம் அதிக தூரத்தில் இருப்பதாகத் தெரியலாம்.

ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒருவருடைய ஆயுட்காலம் 82 வயதாக கணிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஓய்வுபெற்ற பின்னரும் 15 - 20 வருடங்களுக்கு உங்களுக்கு வருமானம் தேவைப்படும்.

அரசின் ஓய்வூதியம் பலருக்குக் கிடைக்கும் என்ற போதிலும் முதுமைக்காலத்தை சந்தோஷமாக கழிப்பதற்கு அது நிச்சயம் போதாது என குறிப்பிடப்படுகின்றது.

எனவே 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு தொழிலாளருக்கும் பிற்காலத்தில் Superannuation மிகவும் அவசியமானது.
Superannuation
இனி இந்த Superannuation எப்படி சேமிக்கப்படுகின்றது என்று பார்ப்போம்.

மாதமொன்றுக்கு 450 டொலர்களுக்கு அதிகமாக உழைக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தின் 9.5% வீதத்தை அவர்கள் பணிபுரியும் நிறுவனம் Superannuation சேமிப்பாக நிதியம் ஒன்றில் சேமிக்க வேண்டும். சில ஆண்டுகளில் இந்த 9.5%, 12% ஆக உயர்த்தப்படும். இவ்வாறு சேமிக்கப்படும் நிதி பங்குச் சந்தையிலோ அல்லது வேறு இடங்களிலோ முதலீடு செய்யப்பட்டு பல மடங்காக பெருக்கப்படும்.

நீங்கள் வேலை ஒன்றில் சேர்வதற்கான பயிற்சியாளராக(Trainee) இருந்தாலும் கூட மாதமொன்றுக்கு 450 டொலர்களுக்கு அதிகமாக உழைத்தீர்கள் என்றால் நீங்களும் Superannuation க்கு தகுதியானவராகவே கருதப்படுவீர்கள்.
AAP
Source: AAP
ஆஸ்திரேலியா முழுவதுமுள்ள 17 மில்லியன் பேர் Superannuation க்கு பங்களிப்பு செலுத்திவருகின்றனர். ஆனால் கையில் காசு வாங்குதல் மற்றும் 2,3 பகுதி நேர வேலைகளைச் செய்தல் போன்றவற்றால் பலருக்கு Superannuation சேமிப்பு இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

2015 டிசம்பர் வரையான ஆஸ்திரேலியாவின் Superannuation சேமிப்பு 2 ரில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது.

இந்த நிதியை கையாளுவது யார் என்று நீங்கள் யோசிக்கலாம். பெரிய பெரிய வங்கிகள் மற்றும் இதற்கென உள்ள நிதி நிறுவனங்கள் Super நிதிகளை மேலாண்மை செய்கின்றன.
AAP
Source: AAP
இதேவேளை உங்களது Superannuation எங்த நிதியத்தில் சேமிக்கப்பட வேண்டும் யாரால் நிர்வகிக்கப்பட வேண்டுமென்பதை நீங்களே தெரிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு தெரிவு செய்யாத பட்சத்தில் உங்களது முதலாளி அதனைத் தீர்மானிப்பார்.

காலம் செல்லச் செல்ல உங்களது Superannuation நிதி அதிகரித்துக் கொண்டே செல்லும். ஆனால் எல்லா நிதியங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எனவே உங்களுக்கான Super நிதியத்தைத் தெரிவு செய்யும் போது அவற்றின் செயற்றிறனையும் ஆராய்ந்து பாருங்கள்.
getty
அதேநேரம் உங்களது வருமானத்திலிருந்து இன்னுமொரு பகுதியை நீங்களும் Superannuation சேமிப்புடன் இணைக்கும் போது இன்னுமதிக தொகையை நீங்கள் ஓய்வுபெறும் போது பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்பவர்களில் ஆண்டொன்றுக்கு 51 ஆயிரம் டொலர்களுக்குக் குறைவாக உழைப்பவர்களின் நிதியுடன் ஆண்டொன்றுக்கு அரசு வழங்கும் 500டொலர் ஊக்கத்தொகையும் சேர்ந்து கொள்ளும்.

இது தவிர வெவ்வேறு Super கணக்குகளை வைத்திருக்காமல் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்ப்பதும் உங்கள் சேமிப்புத் தொகையை அதிகரிக்கும்.
AAP
Source: AAP
ஆஸ்திரேலிய வரித்திணைக்களத்தின் தகவலின் படி நாட்டிலுள்ள 45 வீதமானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட Super கணக்குகளை வைத்திருக்கும் அதேநேரம் 11 வீதமானவர்கள் 3 Super கணக்குகளை வைத்திருக்கிறார்கள்.

உங்கள் பெயரில் வெவ்வேறு Super கணக்குகள் இருந்தால் MyGov  என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம் அவற்றை ஒரு கணக்கின்கீழ் கொண்டுவர முடியும்.

இதேவேளை Super கணக்கிலுள்ள பணத்தை உங்களுக்கு 57 வயது ஆகும் போது நீங்கள் பயன்படுத்த முடியும் என்ற போதிலும் நாட்டில் ஓய்வு பெறுவதற்கான வயதெல்லை 70 ஆக அதிகரிக்கப்படுவதால் Super பணத்தை பயன்படுத்துவதற்கான வயதெல்லையும் மாற்றமடையலாம்.
AAP
Source: AAP
இலங்கை அல்லது இந்தியாவில் பிறந்து இங்கு புலம்பெயர்ந்த ஒருவர் தனது முதுமைக் காலத்தை தாய் நாட்டில் கழிக்க விரும்பினால் அவர் தனது Super நிதியை மீளப்பெற்று விரும்பிய இடத்திற்குச் சென்று வாழலாம்.

Super நிதி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழேயுள்ள இணையத்தளங்களுக்குச் செல்லுங்கள்.



Australian Taxation Office (ATO)

Australian Taxation Office (ATO)

MoneySmart

The Association of Superannuation Funds of Australia Ltd

Superannuation Complaints Tribunal



Share
3 min read

Published

Updated

Presented by Renuka.T

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
Superannuation/ஓய்வுறு பருவ நிதி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்! | SBS Tamil