Spring அல்லது இளவேனிற்காலமென்பது சூரிய ஒளி, பூக்கள் என இதமான பருவமாக இருந்தாலும் பலருக்கு இது துன்பமான காலப்பகுதியாகவும் அமைந்துவிடுவதுண்டு.
குறிப்பாக மெல்பேர்ன்வாசிகள் பலர் தும்மல், கண்களில் கடி, hayfever, ஆஸ்துமா என பலவிதமான உபாதைகளால் அவஸ்தைப்படுவது வழக்கம்.
இதன் உச்சக்கட்டம்தான் அண்மையில் மெல்பேர்னைத் தாக்கிய "thunderstorm asthma".
இவற்றுக்கெல்லாம் காரணம் pollen எனப்படும் பூந்தாதுக்களால் ஏற்படும் ஒவ்வாமையாகும்.
எனவே pollenகளின் தாக்கம் ஒவ்வொரு நாளும் வளிமண்டலத்தில் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதை அவதானித்து முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்கு ஒரு கைத்தொலைபேசி App உங்களுக்கு உதவக்கூடும்.
காலநிலை App போன்று ஒவ்வொருநாளும் வளிமண்டலத்தில் pollen களின் தாக்கம் எவ்வாறு இருக்கின்றன என்பதை அறிந்து கொள்வதற்கு மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் melbournepollen appஐ பயன்படுத்திப் பாருங்கள்.
இந்த App மூலம் 7 நாட்களுக்குரிய எதிர்வுகூறலைப் பெறலாம்.
Share
