நியூசிலாந்து அகதிகள் பேரவையின் முக்கிய உறுப்பினரும் தமிழ் அகதிகளுக்காக குரல் கொடுப்பவர்களில் ஒருவருமான கைலேஷ் தனபாலசிங்கம்(49) என்பவரது வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் அவரது மனைவி(39), மகன்(5) மற்றும் மாமி(66) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பாரிய தீக்காயங்களுக்குள்ளான கைலேஷ், மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றார்.
கைலேஷ் அவரது மனைவி, மகன் மற்றும் மாமி ஆகியோர் நியூசிலாந்தின் தெற்கு Auckland,Flat Bush பகுதியிலுள்ள அவர்களது வீட்டின் மேல்மாடியில் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் தீ ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
அதேநேரம் கைலேஷின் மகள் மற்றும் மாமா ஆகியோர் கீழ்தளத்தில் உறங்கிக்கொண்டிருந்ததால் சிறிய காயங்களுடன் ஆபத்து எதுவுமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.
இத்தீவிபத்திற்கான காரணம் தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.
இலங்கைப் பின்னணி கொண்ட கைலேஷ் கடந்த 10 வருடங்கு முன்னர் நியூசிலாந்தில் தஞ்சமடைந்த நிலையில்,அங்குள்ள சமூகத்துடன் இணைந்து பல பணிகளில் ஈடுபட்டுள்ள அதேநேரம், புதிதாக குடியேறும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிவந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Share
