46 வயது தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகிறது.
இலங்கையைச் சேர்ந்த குறித்த நபரின் அகதி தஞ்சக்கோரிக்கை நிரகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 வருடங்களாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இலங்கையின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட குறித்த நபரின் இரு சகோதரர்கள் போரில் மரணமடைந்துள்ள நிலையில் இவரது உயிருக்கும் ஆபத்து இருப்பதால் அவர் நாடு கடத்தப்படக்கூடாது என வலியுறுத்தி தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக திரு.ஜொனி தெரிவித்தார்.
தன்னோடு சேர்ந்து சுமார் 50 பேரளவில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
