விக்டோரியா மாநிலத்தில் இன்று வெப்பநிலை அதிகமாகக் காணப்படுவதுடன் பிற்பகல் புயற்காற்று வீசலாம் என்பதால் மீண்டும் 'Thunderstorm asthma' நோய் தாக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.
எனவே இன்று பிற்பகல் முதல் நாளை காலை வரை ஆஸ்துமா, hay fever, மற்றும் Pollen ஒவ்வாமை உள்ளவர்கள் உரிய முன்னேற்பாடுகளுடன் இருக்குமாறு National Asthma Council தலைவர் Dr Jonathan Burdon எச்சரித்துள்ளார்.
அதேநேரம் விக்டோரியா மாநிலம் முழுவதும் மேலதிக ambulance குழுவினரும் அவசர சேவைப் பிரிவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
இதேவேளை சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் எப்போதும் தம்முடன் Ventolin போன்ற மருந்துகளை வைத்திருப்பது நல்லதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தாம் வழக்கமாக பயன்படுத்தும் மருந்துகளால் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், உடனடியாக மருத்துவ உதவிபெறவேண்டும் எனவும், ambulance வருவதற்குத் தாமதமானாலோ அல்லது உடனடியாக அங்கு வரமுடியாத சூழல் காணப்பட்டாலோ வேறு ஏதாவது வாகனத்தில் பாதிக்கப்பட்ட நபரை மருத்துமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர வழக்கமாக ஆஸ்துமா வராத ஒருவருக்கு திடீர் சுவாசக்கோளாறு ஏற்பட்டாலும் உடனடி மருத்துவ உதவி பெறவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 21ம் திகதி இதுபோன்ற வானிலை மாற்றத்தால் 'Thunderstorm asthma' ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share
