பச்சை நிறக்கண்கள், சோகமான முகம், கிழிந்த ஆடை, ஆகியவற்றுடன் காணப்பட்ட ஆப்கான் பெண்ணான ஷர்பாத் குலாவின் புகைப்படம் 1985ம் ஆண்டு National Geographic சஞ்சிகையின் அட்டைப் படமாக வெளியிடப்பட்டதையடுத்து இவர் உலகெங்கும் பிரபலமானார்.
இதுவரை தாம் வெளியிட்ட புகைப்படங்களில் இன்றுவரை பலரும் ஞாபகத்தில் வைத்திருக்கும் புகைப்படம் ஷர்பாத் குலாவினுடையதே என National Geographic சஞ்சிகை தெரிவித்திருந்தது.

ஷர்பாத் குலா ஆப்கானிலிருந்து அகதியாக பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்திருந்த நிலையில் இவர் பாகிஸ்தானில் போலி அடையாள அட்டைகளுடன் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
ஷர்பாத் குலா, ஷர்பாத் பீபி என்ற போலியான பெயரில், பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் தங்கியிருந்ததாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த விசாரணையின் முடிவில், குலா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால் ஷர்பாத் குலாவிற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
