2018ம் ஆண்டு அமெரிக்காவில் நிரந்தர வதிவிட உரிமை-Green Card வழங்குவதற்கு 50 ஆயிரம் பேரைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
Green Card Lottery என்று அழைக்கப்படும் அதிஷ்ட குலுக்கல் மூலமான பல்வகைமை குடியேற்ற வீசா நிகழ்ச்சித் திட்டம்-Diversity Visa Lottery Program வருடாவருடம் அமெரிக்காவால் நடத்தப்படுவது வழக்கம்.
எதிர்வரும் நவம்பர் 07 ம் திகதி வரை இந் நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களை இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Bangladesh, Brazil, Canada, China, Colombia, Dominican Republic, El Salvador, Haiti, India, Jamaica, Mexico, Nigeria, Pakistan, Peru, Philippines, South Korea, United Kingdom (except Northern Ireland) and its dependent territories, Vietnam ஆகிய நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக, தமிழ், சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அறிந்துகொள்வதற்கு lk.usembassy.gov அல்லது Diversity Visa Lottery Program என்ற இணைப்பிற்குச் செல்லவும்.
Share
