SKIP TO MAIN CONTENT

உடையிலேயே போனை சார்ஜ் செய்யலாம்!

Zhong Lin Wang
Source: Zhong Lin Wang

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

நமது மொபைல் போன்களை சார்ஜ் செய்துகொள்ளக் கொள்ளக்கூடிய வகையில் மெல்லிய துணி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்க மற்றும் சீன விஞ்ஞானிகளின் இரண்டு வருட ஆராய்ச்சியின் பலனாக  மிகவும் மெல்லிய நெகிழ்வுத்தன்மை கொண்ட இத்துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரியஒளி மற்றும் அசைவு ஆகியவற்றின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இத்துணியைக் கொண்டு நமது மொபைல் போனையோ அல்லது GPS கருவியையோ அல்லது வேறு சிறிய இலத்திரனியல் கருவிகளையோ சார்ஜ் செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரண துணியோடு ஒப்பிடும் போது இத்துணியில் பெரியளவு வித்தியாசம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ள இதன் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான  பேராசிரியர் Zhong Lin Wang இதை இன்னும் இரண்டு வருடங்களுக்குள் விற்பனைக்கு விடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.

 

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now