விக்டோரியா மாநிலத்தில் $600,000-க்கு குறைவான பெறுமதியில் தமது முதலாவது வீட்டை வாங்குபவர்களுக்கான stamp duty நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம் $600,000-$750,000 பெறுமதியான வீட்டை வாங்குபவர்களுக்கு வரித்தள்ளுபடிகள் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சலுகைகள் ஜூலை 01 முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், இதன்மூலம் ஆண்டொன்றுக்கு தமது முதலாவது வீட்டை வாங்கும் 25,000 பேர் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
$600,000 பெறுமதியான வீட்டை வாங்கும் ஒருவர் stamp duty-இல் $15,535 சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.