வெளிநாட்டில் சொத்து ஒன்றை வாங்கி முதலீடு செய்ய வேண்டுமென்று நினைத்திருக்கிறீர்களா?
அப்படிச் செய்வது அதிகளவு இலாபத்தைத் தரும் என்ற போதிலும் அதை நீங்கள் ஆஸ்திரேலிய வரித்திணைக்களத்திற்கு தெரியப்படுத்த வேண்டியது முக்கியமாகும்.
ஆஸ்திரேலிய வரித்திணைக்களத்தின் 2014ம் ஆண்டு தரவுகளின்படி 5 வீதமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு முதலீடுகளிலிருந்து வருமானம் பெறுகின்ற அதேநேரம் வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த இரு தசாப்தங்களில் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

nest_egg_-craig_mccausland_getty_images Source: Craig McCausland/Getty Images
இதனால் ஓய்வூதியம் உட்பட வெளிநாடுகளிலிருந்து எந்த வழியில் வருமானம் வந்தாலும் அதை ஆஸ்திரேலிய வரித் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு ஆஸ்திரேலிய வரித் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுவதற்குக் காரணம் அந்த வருமனத்திற்காக நீங்கள் வரி செலுத்த வேண்டுமென்பதற்காக அல்ல.

Source: Getty Images
40 வெளிநாடுகளுடன் ஆஸ்திரேலியா வரி ஒப்பந்தம் செய்திருப்பதால் நீங்கள் இரு தடவைகள் இதற்காக வரி செலுத்த வேண்டியேற்படாது. ஆனால் எவ்வளவு வரி வெளிநாடுகளில் கட்டப்படுகின்றது என்பதை ஒப்பிட்டு, ஆஸ்திரேலிய வரி வருமானத்தில் அது எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பது கணிப்பிடப்படும்.
வெளிநாடுகளில் 50 ஆயிரம் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுள்ள சொத்துக்கள் ஏதேனும் இருந்தால், அதிலிருந்து நீங்கள் வருமானம் எதுவும் பெறாவிட்டாலும் அதையும் நீங்கள் வரித்திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும். நீங்கள் tax return செய்யும் போது கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
வரி ஏய்ப்புச் செய்வது குற்றம் என்ற போதிலும் பலர் தமக்கு வெளிநாடுகளிலிருக்கும் சொத்துக்களை வரித் திணைக்களத்திடமிருந்து மறைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இதை வரித்திணைக்களம் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அது பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதேவேளை வெளிநாடுகளிலுள்ள முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானம் உங்களது ஓய்வூதியத்தொகையில் தாக்கம் செலுத்தக்கூடும்.

Source: Getty Images

Source: Oliver Burston/Getty Images
அதேபோல் வெளிநாடுகளிலுள்ள சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தை அந்த நாட்டிலேயே செலவழிப்பதும்கூட உங்களது ஓய்வூதியத் தொகையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
மேலும் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறி 6 வாரங்களுக்கு மேல் இன்னொரு நாட்டில் வாழப் போகிறீர்கள் என்றால் அதனை Centrelink-க்கு தெரியப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

Source: Getty Images
அத்துடன் எவ்வளவு நாட்களுக்கு வெளிநாட்டில் தங்கப் போகிறீர்கள் என்பதை ஆஸ்திரேலிய வரித்திணைக்களத்திற்குத் தெரியப்படுத்துவதும் முக்கியமானதாகும்.
வெளிநாட்டிலுள்ள முதலீடுகள் தொடர்பில் ஆஸ்திரேலிய வரித்திணைக்களத்திற்கு தெரியப்படுத்துவது உட்பட அது குறித்த மேலதிக விபரங்களுக்கு கீழ்க்காணும் இணைப்புக்களுக்குச் செல்லுங்கள்.