ஆஸ்திரேலியாவில் ஒருவர் தற்காலிகமாக தங்கியிருந்து வேலைசெய்வதற்கான 457 விசாவில், அரசு முக்கிய மாற்றத்தை அண்மையில் கொண்டுவந்திருந்தமை நாமறிந்த ஒன்று.
அதாவது 457 வீசாவில் தங்கியிருந்து வேலை செய்யும் ஒருவரின் விசாவோ அல்லது அவர் தொழில் செய்வதற்கான காலமோ முடிவடைந்த பின்னர் மேலதிகமாக 60 நாட்கள் மட்டுமே அவர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும் என்பதே இம்முக்கிய மாற்றமாகும்.
இந்தப்பின்னணியில் மற்றொரு மாற்றமும் கொண்டுவரப்படவுள்ளதாக குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
457 விசா பெறத் தகுதியான தொழில்கள் என தற்போது 650 தொழில்கள் பட்டியலில் உள்ளன என்றும், ஆனால் இதை மாற்றியமைத்து சுருக்கமான பட்டியல் ஒன்றைத் தயாரிக்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்
என்னென்ன தொழில்கள் இதற்குள் அடங்கும் என்பது தெரியாவிட்டாலும் ஆஸ்திரேலிய அரசின் 2016-2017 Skilled Occupation List-தொழிற்பட்டியலில் கீழ்க்காணும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வேலைகள் நீக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Flagged SOL Source: SBS

Flagged SOL Source: SBS

Flagged SOL Source: SBS