SKIP TO MAIN CONTENT

விமானநிலையத்தில் தொலைத்த மதிப்புள்ள பொருட்கள் இணைய ஏலத்திற்கு வருகின்றன:விலை ஒரு டொலரிலிருந்து ஆரம்பம்!

Pickles
Source: Pickles

1 min read

Published

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

சிட்னி விமானநிலையத்தில் பயணிகளால் தொலைக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட பல வகையான பொருட்கள் இணையம் மூலம் ஏல விற்பனைக்கு விடப்படுகின்றன.

வயலின், சைக்கிள், மதுபானங்கள், microwave, kettle, tool kit, strollers , phones, laptops, cameras , tablets, telescope என 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் இதற்குள் அடங்குகின்றன.

இந்த விற்பனையின் மூலம் கிடைக்கும் பணம் The Clontarf Foundation, Lifeline Australia, The Australian Kookaburra Kids Foundation , Conservation Volunteers Australia ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

கடந்த வருடம் இவ்வாறு நடத்தப்பட்ட ஏலத்தின் மூலம் 234,000 டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டதாகவும் இவ்வருடம் அதைவிடக் கூடுதலான தொகை கிடைக்குமெனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் சிட்னி விமான நிலையப் பேச்சாளர் Emma Mellow தெரிவித்தார்.

இதேவேளை ஏலத்திற்கு விடப்படவுள்ள பொருட்களின் விலை 1 டொலரிலிருந்து ஆரம்பமாகின்றன.

குறித்த பொருட்களை அக்டோபர் 10, திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் பிற்பகல் 4.30 மணிவரை Pickles auctioneers, Milperra, Sydney என்ற முகவரியில் நீங்கள் பார்வையிடலாம். அதன் பின்னர் அக்டோபர் 11 செவ்வாய்க்கிழமை முதல் 20ம் திகதி வியாழக்கிழமை வரை  www.pickles.com.au என்ற இணையம் ஊடாக ஏல விற்பனை நடைபெறுகின்றது.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now