SKIP TO MAIN CONTENT

வீடுகள் விலை சரிவை சந்திக்கின்றன!

சிட்னி மற்றும் மெல்பன் நகரங்களில் வீடுகளின் விலை மிகப் பெரிய சரிவைச் சந்திக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

Australia real estate house price concept
Australia real estate house price concept Source: Getty Images

1 min read

Published

Updated

By Raymond Selvaraj



Skip to article content

சிட்னி மற்றும் மெல்பன் நகரங்களில் வீடுகளின் விலை மிகப் பெரிய சரிவைச் சந்திக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் வீடுகளின் விலை குறைந்தபட்சம் 15 சத விலை வீழ்ச்சியை சந்திக்கும் என்று பொருளியல் நிறுவனமான  JP Morgan கூறியுள்ளது.

சிட்னி நகரில் வீடுகளின் விலை 18 சத சரிவையும், மெல்பன் நகரில் 19 சத விலை சரிவையும் சந்திக்கும் என்று பொருளியல் நிறுவனமான  JP Morganனின் Henry St John கூறியுள்ளார்.

மேலும் Brisbane, Adelaide நகரங்களிலும் வீடுகளின் விலை கணிசமாக குறையும் என்றபோதிலும், அது 1௦ சததிற்கும் குறைவாக இருக்கலாம் என்று அவர் கணிக்கிறார். Perth நகர் வீடுகளின் விலை 15 சதம் வரை குறையலாம் என்றும் கணிக்கப்படுகிறது.         

சாதாரண மக்களால் வீடு வாங்க இயலாத நிலையில் அவர்களின் வருமானம் இருப்பதாலும், முதலீட்டாளர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாலும், வெளிநாட்டிலுள்ளவர்கள் வீடு வாங்க புதிய கட்டுப்பாட்டுகள் இருப்பதாலும், நகரங்களில் அடுக்குமாடி வீடுகள் பல கட்டப்பட்டு அவை விற்பனையாவது கடினம் என்ற நிலையைச் சந்திப்பதாலும்  வீடுகளின்  விலை சரிவு தவிர்க்க இயலாத ஒன்று என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு வீடுகளின் விலை உயரும் வாய்ப்பில்லை என்று வீடுகளின் விலை 15 சதம் வரை குறையும் என்ற கணிப்புடன் உடன்படாத வல்லுனர்களும் கூறுகின்றனர்.  


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now