நாட்டின் பெரிய வங்கிகள் நீங்கள் தவணை முறையில் செலுத்தும் வீட்டுக்கடன் கொடுப்பனவை அதிகரிக்கக்கூடிய நிலை எழுந்துள்ளதாக பொருளியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான காரணம் The net stable funding ratio-Basel III எனப்படும் சர்வதேச கடப்பாடு ஒன்றை வங்கிகள் பின்பற்ற வேண்டியுள்ளமையே என குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி வங்கிகள் தம்வசம் மிகப்பெரும் முதலீட்டுத்தொகைகளை வைத்திருக்க வேண்டும்.
எனவே இதனை ஈடுகட்டுவதற்கு வங்கிகள் இரண்டு வழிகளைக் கையாளலாம். ஒன்று வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தலாம். அல்லது அடுத்த வருடம் நீங்கள் எதிர்பார்க்கும் variable rate க்கான discount/சலுகைகளை குறைக்கலாம்.
மேற்குறிப்பிட்ட இரு வழிகளையும் வங்கிகள் கையாளும் பட்சத்தில் அடுத்த வருட ஆரம்பம் முதல் வீட்டுக்கடன் தவணைத் தொகையை அதிகம் செலுத்துமாறு வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி தரலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
Share
