Watch FIFA World Cup 2026™ LIVE, FREE and EXCLUSIVE

வலி நிவாரண மாத்திரைகளுக்கும் இருதயம் திடீரென செயலிழப்பதற்கும் தொடர்பு- ஆய்வு

Packets of the painkiller Nurofen

Source: AAP

மருந்தகங்களில் சாதாரணமாக கிடைக்கும் வலிநிவாரண மாத்திரைகளை உட்கொள்வதற்கும் cardiac arrest எனப்படும் திடீர் மாரடைப்பால் இதயம் செயலிழப்பதற்கும் தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று சொல்கிறது.

டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1995ம் ஆண்டு முதல் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்களில் மேற்கொண்ட ஆய்வினை அடிப்படையாக வைத்து இம்முடிவினை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி Nurofen , Advil போன்ற non-steroidal anti-inflammatory drugs (NSAIDs) வலி நிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு cardiac arrest ஏற்படுவதற்கான வாய்ப்பு 31 சதவீதம் அதிகம் காணப்படுவதாக இவ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வலி நிவாரண மாத்திரைகளை ஒருவர் பயன்படுத்திய உடனேயே cardiac arrest ஏற்படும் என அஞ்சத்தேவையில்லை என்றபோதிலும், ஏற்கனவே இருதயம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கு இதனால் பாதிப்பு அதிகம் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதையடுத்து மருந்தகங்களில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய வலிநிவாரண மாத்திரைகள் மீது கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

 


1 min read

Published

Presented by Renuka.T

Source: AAP



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now