SKIP TO MAIN CONTENT

Victorian election result shows Labor victory!

விக்டோரிய மாநிலத்தில் லேபர் கட்சி அமோக வெற்றி!

Daniel Andrews
Source: APP

2 min read

Published

Updated

By Raysel

Source: SBS



Skip to article content

இன்று நடந்து முடிந்த விக்டோரிய மாநிலத் தேர்தலில் ஆளும்கட்சியான லேபர் கட்சி வெற்றிபெற்று Premier Daniel Andrews ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். மொத்தமுள்ள 88 தொகுதிகளில் லேபர் கட்சி 50 தொகுதிகள் வரைக் கைப்பற்றும் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன. குறிப்பாக தலைநகர் மெல்பன் நகரில் ஆளும் லேபர் கட்சிக்கு ஆதரவான அலை வீசியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் வர்ணிக்கின்றனர். மெல்பன் நகரில் சுமார் 50 பில்லியன் டாலர் செலவில் புதிய ரயில் திட்டம் அமைப்போம் என்ற லேபர் கட்சியின் வாக்குறுதி வாக்காளர்களை பெரிதும் கவர்ந்திருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.

எதிர்கட்சியான Liberal/National Coalition யால் எதிர்பார்த்த அளவு வாக்காளர்களைக் கவர இயலவில்லை. இதன்மூலம் எதிர்கட்சித் தலைவர் Matthew Guy அவர்கள் Liberal/National Coalition கூட்டணிக் கட்சியின் தலைவராக தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விக்டோரிய மாநிலத்தின் நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டது. கீழ் சபை என்று அழைக்கப்படும் Legislative Assembly க்கு மொத்தமுள்ள 88 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு 45 இடங்கள் தேவை. ஆளும் லேபர் கட்சிக்கு தேர்தலுக்கு முன்பு 45 இடங்கள் இருந்தன. ஆளும் லேபர் கட்சி இன்றைய தேர்தலில் எளிதாக 45 இடங்கள் கிடைக்கும் என்றும் ஒருவேளை லேபர் கட்சி மேலும் பல இடங்களை அதிகமாக கைப்பற்றும் என்றும்  வந்துகொண்டிருக்கும் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே அதேவேளையில் எதிர்கட்சியான Liberal/National Coalition கூட்டணிக்கு கடந்த நாடாளுமன்றத்தில் 37 இடங்கள் இருந்தன. இந்த கூட்டணி அந்த 37 இடங்களையும் தக்கவைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மூன்றாவது முக்கிய கட்சியான Greens கட்சிக்கு கடந்த நாடாளுமன்றத்தில் 3 இடங்கள் இருந்தன. அந்த 3 இடங்களையும் அந்த கட்சி இந்த தேர்தலில் தக்கவைத்துக்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.    

விக்டோரிய மாநில நாடாளுமன்றத்தின் மற்றொரு அவையான மேலவை என்று அழைக்கப்படும் Legislative Council க்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 40 இடங்களுக்கும் இன்று நடைபெற்ற தேர்தலில் யார் வெற்றிபெற்றுள்ளனர் என்பதை முழுமையாக உறுதிசெய்ய இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று நம்பப்படுகிறது. கலைக்கப்பட்ட கடந்த Legislative Council லில் மொத்தமுள்ள 40 இடங்களில் ஆளும் லேபர் கட்சிக்கு 14 இடங்கள் மட்டுமே இருந்தன. எதிர்கட்சியான Liberal/National Coalition கூட்டணிக்கு 16 இடங்கள் இருந்தன. மூன்றாவது முக்கிய கட்சியான Greens கட்சிக்கு 5 இடங்கள் இருந்தன. ஆளும் லேபர் கட்சி  Legislative Council லில் அதிக இடங்களைக் கைப்பற்றலாம் என்றபோதிலும் பெரும்பான்மை பெறுவது கடினமே என்றே பார்க்கப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now