Settlement Guide: How to change your name

Getty Images

Getty Images Source: Getty Images

There are many reasons why a person may wish to change their name. It could be because they got married, divorced, they prefer another name or because they need to formalise certain documents. While the process to change is relatively simple, there are concerns some migrants change their name to avoid discrimination.


மெல்பேர்ணைச் சேர்ந்த எமிலியா ரோஸி திருமணத்தின் பின் தனது கணவனின் பெயரை சேர்த்துக் கொள்ள விரும்பினார். இதற்காக Registry Of Births, Deaths and Marriages ஐத் தொடர்பு கொண்ட எமிலியா ஒரு படிவத்தைப் பெற்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டார்.

சில காலத்தின் பின்னர் கணவனைப் பிரிந்த எமிலியா மீண்டும் தனது பழைய குடும்பப் பெயருக்கு மாற விரும்பினார். இதற்காக Registry Of Births, Deaths and Marriages ஐத் தொடர்பு கொண்டு பெயரை மாற்றிக் கொண்டார்.

ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள Registry Of Births, Deaths and Marriages  மக்களின் பிறப்பு, இறப்பு மற்றும் பெயர்களைப் பதிவு செய்வதற்குப் பொறுப்பாக உள்ளது.

குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் மட்டுமல்லாமல் மதம் மற்றும் இன அடையாளங்களை வெளிப்படுத்தும் பெயர்களால் சிக்கலை எதிர்கொள்ளும் பலரும் கூட தமது பெயர்களை மாற்ற விரும்புவதாக NSW Registry Of Births, Deaths and Marriages இன் துணைப் பதிவாளர் Ben Finn தெரிவித்தார்.
Marriage
Immigration cost is pushing Indian migrants to look for partners in Australia. Source: Wikipedia Commons
இதேவேளை பல்கலாச்சாரப் பின்னணி கொண்டவர்கள் ஆஸ்திரேலியாவில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது தமது பெயர்களை மட்டும் அடிப்படையாக வைத்து விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை ஆமோதிக்கிறார் விக்டோரியா மாநில நிதி மற்றும் பல்கலாச்சாரங்களுக்குப் பெறுப்பான அமைச்சர் Robin Scott.

இப்படியான மனப்பான்மையை வேலை வழங்கும் நிறுவனங்கள் வளர்த்துக் கொள்ளக்கூடாது எனவும் விக்டோரியா மாநில நிதி மற்றும் பல்கலாச்சாரங்களுக்குப் பெறுப்பான அமைச்சர் Robin Scott வலியுறுத்துகிறார்.

இதேவேளை ஏதோவொரு காரணத்திற்காக தனது பெயரை மாற்ற விரும்பும் ஒருவர் இதற்கான விண்ணப்பத்தை NSW Registry Of Births, Deaths and Marriages இல் தாக்கல் செய்ய வேண்டும்.
changing name
Source: NSW registry
18 வயதிற்கு மேற்பட்ட எவரும் பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பிக்கலாம் என்ற போதிலும் இதற்கான சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம் எனச் சொல்கிறார் NSW Registry Of Births, Deaths and Marriages இன் துணைப் பதிவாளர் Ben Finn.

பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பத்தை நேரடியாகவோ அல்லது இணையம் மூலமாகவோ தாக்கல் செய்யலாம்.

ஆனால் பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் எனச் சொல்லமுடியாது என்கிறார் துணைப் பதிவாளர் Ben Finn.

பெயர் மாற்றம் தொடர்பில் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள உங்கள் மாநிலத்திலுள்ள Registry Of Births, Deaths and Marriages ஐத் தொடர்பு கொள்ளலாம். அல்லது  www.australia.gov.au என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.



Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand