Settlement Guide: Stroke requires urgent help

Public Domain

Public Domain Source: Public Domain

One in six Australians will suffer from stroke at some point in their lifetime according to the Stroke Foundation. Getting urgent medical help is critical to survival and recovery.Patients from migrant communities can face challenges in finding the right assistance.September 12 to 18 is National Stroke Week and were urged to think FAST and act fast as soon as we notice signs of stroke.


34 வயது Cheryl Chhin க்கு Stroke ஏற்படும் வரை அது பற்றி அவர் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.

ஆம்புலன்சை அழைக்கும் அளவுக்கு ஆபத்தான கட்டத்தில் தான் இல்லை என Cheryl Chhin நினைத்தார்.

போதிலும் அதிஷ்டவசமாக அவரது கணவர் உடனடியாக ஆம்புலன்சை அழைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து வலது பக்க உடலின் செயற்பாடுகளை இழந்த Cheryl Chhin ஆல் ஒழுங்காகப் பேசவும் முடியவில்லை.

எனினும் தனது விடாமுயற்சியும் தகுந்த மருத்துவ உதவியின் மூலம் Cheryl Chhin பழைய நிலைக்குத் திரும்பியிருக்கிறார்.
stroke
Source: Getty Images
ஆஸ்திரேலியர்களின் உயிரைப் பறிக்கும் மிக முக்கிய காரணியான Stroke பெரும்பாலும் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பினால் மூளைக்கு போதியளவு இரத்தம் செல்லாததாலேயே ஏற்படுகிறதென Stroke Foundation’s Clinical Council இன் தலைவர் Dr Bruce Campbell கூறினார்.

2014 Stroke Foundation அறிக்கையின்படி ஆஸ்திரேலியாவில் அரை மில்லியன் பேர் Stroke ஏற்பட்டு அதிலிருந்து உயிர்பிழைத்தவர்கள். எனினும் இவர்களில் மூன்றில் இரண்டு வீதமானவர்கள் ஒழுங்காக நடக்க முடியாமை அல்லது பேச முடியாமை போன்ற ஏதோ ஒரு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

பெரும்பாலும் Stroke வயது முதிர்ந்தவர்களைத் தாக்கும் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் இது வயது வித்தியாசமின்றி எவரையும் தாக்கலாம்.

எனவே திடீரென உங்கள் முகம் மற்றும் உடல் பாகங்களில் ஏற்படும் வலி அல்லது மாற்றங்கள் அத்துடன் ஒழுங்காக பேச முடியாமல் போகின்ற நிலை ஏற்பட்டால் உடனடியாக 000 வை அழைத்து மருத்துவ உதவி நாட வேண்டுமெனச் சொல்கிறார் Dr Bruce Campbell.
F.A.S.T - Stroke Symptoms
Source: The National Stroke Foundation

இப்படியான சமயத்தில் அம்புலன்சுக்கு காத்திருக்கும் வேளையில் நோயாளிக்கு மருந்துகளோ அல்லது குடிப்பதற்கோ எதுவும் கொடுக்கக்கூடாது எனவும் Dr Bruce Campbell சொல்கிறார்.
 
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஒழுங்கான உடற்பயிற்சி, சரியான உணவுக்கட்டுப்பாடு என்பன ஒருவருக்கு Stroke ஏற்படாதவாறு தடுப்பதற்கான முக்கிய வழிமுறைகளாகும்.

Stroke குறித்த மேலதிக விபரங்களைத் தெரிந்து கொள்ள www.strokefoundation.com.au என்ற இணையத்தளதிற்குச் செல்லுங்கள்.

அல்லது 1800 787 653 என்ற StrokeLine  இலக்கத்தை அழையுங்கள்.

மொழிபெயர்ப்பு வசதி தேவைப்படுபவர்கள் 13 14 50 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளலாம்.

 


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand