Watch FIFA World Cup 2026™ LIVE, FREE and EXCLUSIVE

இனவாத தாக்குதலைப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?

Racism

What to do if you witness a racial attack? Source: Getty Images

 VicHealth survey  601 பேரில் நடத்திய ஆய்வின்படி  அவர்களில் மூன்றில் ஒருவர் கடந்த ஆண்டு இனவாத சம்பவத்தைப் பார்த்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் அதைத் தடுப்பதற்கு தாம் எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

பொது இடங்களிலேயே அதிகளவு இனவாத சம்பவங்கள் இடம்பெறும் பின்னணியில் நீங்கள் இனவாத சம்பவம் ஒன்றைப் பார்த்தால் உங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் எவ்வாறு அதில் தலையிடலாம் என All Together Now என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி Priscilla Bryce தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்.

1.   இனவாத கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்தால் அவரைக் கோபப்படுத்தாமல் நீங்கள் ஏன் இப்படியான கருத்துக்களைக் கூறுகிறீர்கள் என அமைதியாக அவரிடம் கேட்கலாம்.

Stop Racism Now
Ugandan refugee Jafri Katagar Source: SBS

2.இனவாத சம்பவத்தை எதிர்கொள்ளும் நபருக்கு அருகில் சென்று நீங்கள் அமரலாம் அல்லது அவரை அந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்லலாம்.

public transport can spread germs
Alcohol-based hand rubs can be useful after using public transport if you’re away from soap and water. Bikeworldtravel/Shutterstock Source: The Conversation

3.ஒரு இனவாத தாக்குதல் சம்பவத்தை உங்களுடன் சேர்ந்து வேறு யாராவது அவதானித்தால் அவருடன் உங்களது தொடர்பு இலக்கங்களைப் பரிமாறுவதன் மூலம் இருவரும் சேர்ந்து காவல்துறையினருக்கு உதவலாம்.

A NSW Police officer is seen in Sydney, Wednesday, May 6, 2015. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING
A NSW Police officer is seen in Sydney, Wednesday, May 6, 2015. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING Source: AAP

4. குறித்த இனவாத சம்பவத்தை கைத்தொலைபேசியில் பதிவு செய்து காவல்துறையினருக்கு கொடுக்கலாம்.

Man looking at phone
Source: Getty Images

5. பலர் ஏன் இப்படி இனவாத தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என எம்மை நாமே கேள்வி எழுப்பி அதற்கெதிராக குரல்கொடுக்கும் வகையில் பல விடயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

racism
Source: Getty Images


Face Up To Racism #FU2Racism with a season of stories and programs challenging preconceptions around race and prejudice. Tune in to watch Is Australia Racist? (airs on Sunday 26 February at 8.30pm), Date My Race (airs Monday 27 February at 8.30pm) and The Truth About Racism (airs Wednesday 1 March at 8.30pm).

Watch all the documentaries online after they air on SBS On Demand.  

 


1 min read

Published

By Dilvin Yasa

Presented by Renuka.T

Source: SBS Life



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now