As more women join the workforce the demand for suitable and affordable child care grows.The cost varies and its often difficult to navigate the system.So, how do you know what services are available and whether your family is eligible to access government subsidy?
child care எனப்படும் குழந்தைகள் பராமரிப்பு சேவை ஆஸ்திரேலியாவில் பலரும் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு சேவையாகும்.
பெரும்பாலும் வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு இச்சேவை ஒரு வரப்பிரசாதமாகும்.
ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி கடந்த 2014இல் நாட்டிலுள்ள 12 வயதுக்கு உட்பட்ட அரைவாசிக்கும் மேற்பட்ட சிறுவர்கள் child care சேவையைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
உங்களது குழந்தையையும் child care மையத்தில் சேர்க்க விரும்பினால் எங்கே? எத்தனை மணித்தியாலங்களுக்கு? எப்படியான இடம்? என பல விடயங்கள் தொடர்பில் ஆராய வேண்டுமெனச் சொல்கிறார் Early Childhood Australia வின் நிறைவேற்று அதிகாரி.
pre-school செல்லும் குழந்தைகளையுடைய பெற்றோருக்கு Long day care பொருத்தமானதாகும்.
இது தவிர Family day care எனப்படும் வீட்டிலேயே சிறுவர் பராமரிப்பு சேவையை வழங்குமிடங்களும் இருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் பாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக சிறுவர்களைப் பராமரிக்கும் இடங்களும் இயங்குகின்றன.
இதேவேளை Child Care Benefit , Child Care Rebate ஆகியவற்றின் மூலம் தகுதிபெறும் குடும்பங்களுக்கு Child Care உதவிகள் அரசிடமிருந்து கிடைக்கின்றன.
எது எப்படியிருப்பினும் தடுப்பூசிகளை ஒழுங்காகப்போட்டுக்கொள்ளும் பிள்ளைகள் மாத்திரமே உhடைன உயசந கொடுப்பனவுகளுக்குத் தகுதி பெறுவர்.
மேலும் child care கொடுப்பனவு பெறும் குடும்பங்கள் தம்மை centrelinkஇல் பதிவு செய்திருக்க வேண்டுமென்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட நிலையத்திலேயே தமது பிள்ளைகளை சேர்க்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் என்னவிதமான child care சேவையைப் பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதைப் பொறுத்து அதற்கான செலவுகளும் வேறுபடும்.
எனவே child care சேவையைப் பெறுவதற்கு முதல் அரச கொடுப்பனவு எவ்வளவு கிடைக்கும் என்பதை centrelinkஇடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.
பல முக்கிய நகரங்களிலுள்ள child care சேவை மையங்களில் தமது பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு பலர் காத்திருப்பதால் நீங்கள் முன்கூட்டியே பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
child care சேவை குறித்த மேலதிக விபரங்களுக்கு www.mychild.gov.au என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.
To find out about accessing financial assistance visit www.humanservices.gov.au
You can check the quality ratings of a service provider by visiting www.acecqa.org.au




