ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இந்த ஆண்டு ஆஸ்திரேலிய தினத்தன்றுதான் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை நாடு முழுவதிலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் 146 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 16 ஆயிரத்து 212 பேருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 35 வீத அதிகரிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொள்வதை சட்டமாக அறிமுகப்படுத்திய 70 வருடங்களில் - இவ்வளவு காலத்திலும் - சுமார் ஐம்பது லட்சம் வெளிநாட்டவர்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு குடியுரிமை பெற்றவர்களில் சுமார் 64 ஆயிரம் பேர் கடந்த ஐந்து வருடங்களில் குடியுரிமை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு தமது ஆஸ்திரேலிய அடையாளத்தை பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த வருடம் முதல் ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்பவர்கள் குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொள்ளும்போது பிரத்தியேக சீருடையை அணிவதற்கான புதிய நடைமுயை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.